Skip to main content

TINY VERSION இரத்த சோகையில் இருந்து விடுவிக்கும் வழிகள்! IRON DEFICIENCY Ezhilarasan health tips library

ஒரே வாரத்தில் இரத்த சோகையில் இருந்து  விடுவிக்கும் சில வழிகள்!
SIMILAR ENGLISH ARTICLE 

இரத்த சோகை என்பது உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு தேவைக்கு குறைவான அளவு இருப்பது அல்லது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் நிலையாகும். இந்த பிரச்சனை வந்தால், உடலுறுப்புக்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல், உறுப்புக்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டு, பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகள் வரலாம்.

 ***   ***   ***

இரத்த சோகையை ஒருவர் ஆரம்பத்திலேயே சரிசெய்ய முயற்சிக்காவிட்டால், அதனால் உயிரையே இழக்க நேரிடும் என்பது தெரியுமா?

இரத்த சோகை பிரச்சனைக்கு ஒருசில இயற்கை வழிகளும் நல்ல தீர்வை வழங்கும்.

கீழ அந்த வழிகள் ...  சுறுக்கமாக....

01 உடல் மசாஜ்

 உங்களுக்கு இரத்த சோகை வராமல் இருக்க வேண்டுமானால், அடிக்கடி உடல் மசாஜ் செய்யுங்கள்.

02 தேன்

தேன் இரத்த சோகையை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை விரைவில் குணமாகும்.

03 எப்சம் உப்பு குளியல்

குளிக்கும் நீரில் எப்சம் உப்பு சேர்த்து கலந்து, அந்நீரில் பாதங்களை ஊற வையுங்கள்.

04 பாதாம்

இரவில் படுக்கும் முன்  நீரில் 10 பாதாமை போட்டு இரவு முழுவதும் ஊற வையுங்கள். பின் மறுநாள் காலையில் அதன் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுங்கள்.

05 எள்ளு விதைகள்

கருப்பு எள்ளு விதைகளை நீரில் போட்டு குறைந்தது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் அதை அரைத்து பேஸ்ட் செய்து, தேன் சேர்த்து கலந்து தினமும் இரண்டு முறை சாப்பிட வும். .

06 தக்காளி

தக்காளி உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவும்.  தினமும் குறைந்தது 2 தக்காளியை சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால், காலை உணவிற்குப் பின், ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் உடன் தேன் சேர்த்து கலந்து குடிக்கவும். .

07 இரும்பு பாத்திரங்கள்

இரும்பு பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவதன் மூலம், உண்ணும் உணவில் இரும்புச்சத்தின் அளவு அதிகரிக்கும்.

08 உலர்ந்த முந்திரிப்பழம், பேரிச்சம் பழம், உலர் திராட்சை

உலர்ந்த முந்திரிப்பழம், பேரிச்சம் பழம், உலர் திராட்சை மூன்றையும் இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிடவும்..

09 சூரிய குளியல்

சூரிய கதிர்கள் சருமத்தின் மீது படுமாறு நீண்ட நேரம் இருக்க வேண்டும். இதனால் சூரிய கதிர்களில் உள்ள "வைட்டமின் டி" உடலில் அதிகரித்து, இரும்புச்சத்தை உறிஞ்ச உதவும்.

10 பசலைக்கீரை

பசலைக்கீரையை வேக வைத்து, பேஸ்ட் செய்து தேன் கலந்து தினமும் சாப்பிடவும்.  இல்லாவிட்டால் பசலைக்கீரையை கடைந்து அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடலாம்.

11 வாழைப்பழம்

இரத்த சோகை இருப்பவர்கள் தினமும் நன்கு கனிந்த வாழைப்பழத்தை தேன் சேர்த்து சாப்பிட வேண்டும்.

12 ஆப்பிள்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதோடு, கேக்குகள், ப்ரௌனீஸ் மற்றும் பல இனிப்பு பண்டங்களில் ஆப்பிளை சேர்த்தும் சாப்பிடலாம்.

13 பால்

பால் இரத்த சோகை பிரச்சனையைக் குறைக்க உதவும். அதிலும் பாலை இரும்பு பாத்திரத்தில் காய்ச்சி, அத்துடன் சிறிது மிளகு சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர வைத்து  குடிக்க வேண்டும்.

14 மாதுளை

காலையில் மாதுளை ஜூஸைக் குடிக்க வேண்டும். அதோடு மாதுளையை சாலட்டுடன் சேர்த்து சாப்பிடுவதோடு, அன்றாடம் ஸ்நாக்ஸ் வேளைகளிலும் சாப்பிடவும்.  .

15 உலர்ந்த கருப்பு திராட்சை

10 உலர்ந்த கருப்பு திராட்சையை நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து பின் மறுநாள் காலையில் எழுந்ததும், விதைகளை நீக்கிவிட்டு, திராட்சையை நீருடன் அப்படியே சாப்பிட வேண்டும். ்.

திரட்டி,
சுறுக்கியது

எழிலரசன் வெங்கடாசலம்
சேலம்

By Maha Lakshmi S

Published On March 12, 2018

Source :

https://tamil.boldsky.com/health/wellness/2018/easy-home-remedies-for-anemia-019807.html

Collected  and abridged
by
Ezhilarasan Venkatachalam
Salem, South India.

Created for my blood relatives


Comments

Popular posts from this blog

THEN WE IMPORTED VACCINES - NOW WE EXPORT

  " Then we imported, now we were exporting". அப்போது வாங்கினோம் இப்போது கொடுக்கிறோம் DELHI. In the year 1947 when India got independence, lakhs of people were affected by Malaria. / புதுடெல்லி. கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்றபோது லட்சக்கணக்கானோர் மலேரி யாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். Then the Red Cross of Canada sent the medicine Pencillin in 93 boxes to India./   அப்போது கனடாவைச் சேர்ந்த  செஞ்சிலுவை சங்கம் சார்பில் இந்தியாவுக்கு 93 பெட்டிகளில் பென்சிலின் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. It reached Delhi on October 17,1947 in an aeroplane.  கனடாவில் இருந்து விமானத்தில் அனுப்பப்பட்ட பென்சிலின் மருந்துகள்  கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் 17-ம்தேதி டெல்லி வந்தடைந்தன.  Ms. Rajkumari Amirth Guar, the then Health Minister received it.  அந்த மருந்துகளை அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் பெற்றுக் கொண்டார். Due to corona pandemic, the European medicine manufacturing factories are struggling to produce enough corona vaccin...

Translation - Just Smiling In the Mirror daily in good - Venkatachalam Salem

Daily even smiling at ourself is good. தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நல்லதாம்.  We often think of a smile as a natural response to feel good emotions. /  நல்ல உணர்ச்சிகளை வெளிக்காட்ட அல்லது உணர  புன்னகையை இயற்கையான பதிலாக நாம்  நினைக்கின்றோம். But did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? /  ஆனால் புன்னகை -- அந்த புன்னகை போலியானதாக இருந்தாலும் -- உங்கள் மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? Just Smile In the Mirror daily. /  தினமும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து சிரிக்கவும். Research found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. /  கண்களைச் சுற்றியுள்ள முகத் தசைச் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு பெரிய புன்னகை, நம் மூளை செயல்பாட்டில் மற்றும் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. All this research points to one...

Just Smile In the Mirror daily Venkatachalam salem health tips

Daily Afternoon Ritual: Smile In the Mirror சுறுக்கமாக : தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நமக்கு நல்லதாம் Theresa Cheung, author of "21 Rituals to Change Your Life," invites you to try a simple ritual for 21 days and find out how small actions can change your life. You are never fully dressed without a smile is how the saying goes and morning ritual number five completely agrees. We often think of a smile as a natural response to feel good emotions but did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? Research done by psychology and facial coding expert Paul Ekman and backed up by recent research* published in Psychological Science found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. All this research points to one simple but wonderful conclusion: smiling will make you feel better. (Frowns actually have the op...