Skip to main content

Ground nuts very good TAMIL.நிலக்கடலை EZHILARASAN HEALTH TIPS LIBRARY


நிலக்கடலை உண்போம்... நீடித்து வாழ்வோம் !

நிலக்கடலை... கடலை, மல்லாக்கொட்டை, மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் உணவுப் பொருள். இதை தொடர்ச்சியாக உண்பதால் வாழ்நாள் நீடிக்கும் என்பது பலரும் அறியாத ஒன்று.

மாறிவிட்ட வாழ்க்கை முறையால், பன்னாட்டு உணவுக் கம்பெனிகளின் கடைவிரிப்பால் நம் மரபுசார்ந்த உணவுப் பொருளான நிலக்கடலையைக் கைவிட்டவர்கள் நம்மில் அதிகம் என்றால் அது மிகை இல்லை.குறிப்பாக நிலக்கடலை எண்ணையை முற்றிலும் புறக்கணித்து விட்டோம் என்றே சொல்லலாம். சமையல் எல்லாமே ரீபைண்ட் ஆயில்தானே!

பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பு களில்தான்  சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு.

நிலக்கடலையில்தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன என்பது ஆய்வுகள் தரும் முடிவு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குத்தான் உண்டு.

நிலக்கடலையில் "போலிக் ஆசிட்" அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது.

எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும்.மேலும், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க் கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேற்றில் தடை இருக்காது. .

நிலக்கடலையில் "மாங்கனீஸ்" சத்து நிறைய உள்ளது. இது, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து "கால்சியம்" நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.

குறிப்பாக பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம் என்பது மருத்துவ ஆய்வின் மகத்தான முடிவு.

தினசரி நிலக்கடலையை 30 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என்பது 20 வருடம் தொடர்ந்து நிலக்கடலையை உண்போரிடையே நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக, நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்பது நம்மிடையே உள்ள எண்ணம். ஆனால் அது உண்மையல்ல. ஒரு மூட நம்பிக்கையே. மாறாக உடல் எடையை சம நிலையில் வைத்திருக்கும் சக்தி நிலக் கடலைக்கு உண்டு. எனவே தாரளமாக நிலக்கடலையைச் சாப்பிடலாம்.

 நிலக்கடலையில் "ரெஸ்வரெட்ரால்" என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த "ஆண்டி ஆக்சிடென்டாக" திகழ்கிறது. இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.

மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம் "மோனோஅன் சாச்சுரேட்டேட் " வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன் "சாச்சுரேட்டேடு" 16 கிராம் உள்ளது.
இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும்.

பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள "ஒமேகா-3" சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலையில் பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடி இருக்கிறது.

இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது என்பதே உண்மை.

100 கிராம் நிலக்கடலையில் நிறைந்துள்ள சத்துக்கள்:

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- --------------------9 மி.கி.
கரையும் கொழுப்பு–40 மி.கி.
புரதம்- -------------------------25 மி.கி.
ட்ரிப்டோபான்------------ 0.24 கி.
திரியோனின் ---------– 0.85 கி
ஐசோலூசின் –--------- 0.85 மி.கி.
லூசின் –-------------------- 1.625 மி.கி.
லைசின் ------------------– 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்--- 5 கி
கிளைசின் ----------------- 1.512 கி
விட்டமின் -------பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து)
-----------------------------– 93.00 மி.கி.
காப்பர் –--------------- 11.44 மி.கி.
இரும்புச்சத்து ----– 4.58 மி.கி.
மெக்னீசியம் -–- 168.00 மி.கி.
மேங்கனீஸ் –--------- 1.934 மி.கி.
பாஸ்பரஸ் –-------- 376.00 மி.கி.
பொட்டாசியம் –-- 705.00 மி.கி.
சோடியம் –------------- 18.00 மி.கி.
துத்த நாகச்சத்து --- 3.27 மி.கி.
தண்ணீர்ச் சத்து –- 6.50 கிராம்.

எனவே நமது மரபு சார்ந்த நிலக்கடலை உணவு உண்பதை வழக்கத்திற்குக் கொண்டு வரலாமே!!
- தேவராஜன்

இயற்கை முறைக்கு மாறுவோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்!

Posted by 7thsens

Sunday, November 16, 2014

Source :

http://naattumarunthu.blogspot.com/2014/11/blog-post_81.html

Collected by
Ezhilarasan Venkatachalam

Global Tamil Based English Trainer
Salem, South India.

Comments

Popular posts from this blog

Translation - Just Smiling In the Mirror daily in good - Venkatachalam Salem

Daily even smiling at ourself is good. தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நல்லதாம்.  We often think of a smile as a natural response to feel good emotions. /  நல்ல உணர்ச்சிகளை வெளிக்காட்ட அல்லது உணர  புன்னகையை இயற்கையான பதிலாக நாம்  நினைக்கின்றோம். But did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? /  ஆனால் புன்னகை -- அந்த புன்னகை போலியானதாக இருந்தாலும் -- உங்கள் மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? Just Smile In the Mirror daily. /  தினமும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து சிரிக்கவும். Research found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. /  கண்களைச் சுற்றியுள்ள முகத் தசைச் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு பெரிய புன்னகை, நம் மூளை செயல்பாட்டில் மற்றும் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. All this research points to one simple but wonderful conclusion:

translation - How to get good sleep?

Tips for getting good sleep கீழ்க்கண்ட வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றினால், நல்ல தூக்கம் உங்களை ஆரத்தழுவிக்கொள்ளும்: Tips for getting good sleep. 1] பகல் தூக்கம் 30-40 நிமிடங்கள் போதும். Restrict your daytime sleep to 30 to 50 minutes. 2] மாலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். Exercises done in the evening will induce good sleep in the night. 3] தூக்கத்தைக் கெடுக்கும் மாத்திரையைத் தவிருங்கள் அல்லது மாலையிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணம்: அதிக சிறுநீர் வெளியேறக் காரணமாக இருக்கும் மாத்திரைகள். Avoid eating certain tablets that  generates excess urine or eat them in the evening itself. 4] இரவு எட்டு மணிக்கு மேல் காபி, மது, புகைப்பிடித்தல் கூடவே கூடாது. Avoid drinking coffee, tea or alcohol after 8 pm. Also avoid smoking. 5] படுப்பதற்கு முன்பு வெந்நீரில் குளித்துவிட்டு வெதுவெதுப்பான பால் அருந்தினால் நல்ல தூக்கம் வரும். Before you go to bed, drinking  lukewarm milk after taking a hot water bath will induce good sleep. 6] வெதுவெதுப்பான பாலில் இரண்டு டீஸ்பூன் தேனு

Daily Drink butter-milk or lemon juice in summer Venkatachalam Salem

  Daily Drink butter-milk or lemon juice in summer Venkatachalam Salem In hot summer days, we sweat a lot.  வெப்பமான கோடை நாட்களில் நம் உடலில் இருந்து நிறைய வியர்வை வரும். . . Therefore, we lose a lot of SALT from our body through sweat.  எனவே, வியர்வை மூலம் நம் உடலில் இருந்து நிறைய  உப்பை  இழக்கிறோம். Hence, drink butter milk with enough SALT to compensate this salt loss. எனவே, இந்த உப்பு இழப்பை ஈடுசெய்ய போதுமான  உப்பு கலந்த   மொரைக் குடிக்கவும். You may also drink homemade lemon juice with added SALT and SUGAR or HONEY. வீட்டில் எலுமிச்சை சாற்றுடன் சிறிது உப்பும் சர்க்கரையும் (அல்லது தேனும்) கலந்து ஜூஸ் செய்து நீங்கள் குடிக்கலாம். If you feel very tired you may be dehydrated.   நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு  நீரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம்.  If you suspect this please get  -ORS packets from a medical shop and mix it with water and drink it.  இதை நீங்கள் சந்தேகித்தால், தயவுசெய்து ஒரு மருத்து கடையில் இருந்து -ORS பாக்கெட்டுகளைப் பெற்று அதை தண்ணீரில் கலந்து குடிக்கவும். AL