மன அழுத்தத்திலிருந்து விடுபட உடற்பயிற்சி எப்படி உதவும்?
(How Can Exercise Help In Recovering From Depression?)
(How Can Exercise Help In Recovering From Depression?)
- மொடாஸ்டா ஆசிரியர் குழு
Updated on: December 21, 2017
Published on: Feb 03 2017
Updated on: December 21, 2017
Published on: Feb 03 2017
உடற்பயிற்சி நமக்கு பல நன்மைகளை வழங்குகிறது, நமது மன நலனை மேம்படுத்துவதும் அதில் முக்கியமான ஒன்றாகும். உடற்பயிற்சி செய்வது மூளைக்கும் உணர்ச்சிகளுக்கும் நன்மை அளிக்கும் என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
ஒவ்வொரு வாரமும் மூன்று முறை கார்டியோ பயிற்சிகள் செய்துவந்தால், மன இறுக்கத்திற்கு அளிக்கப்படும் மருந்துகள் கொடுக்கும் அதே பலன்கள் கிடைப்பதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் மூன்று முறை கார்டியோ பயிற்சிகள் செய்துவந்தால், மன இறுக்கத்திற்கு அளிக்கப்படும் மருந்துகள் கொடுக்கும் அதே பலன்கள் கிடைப்பதாக ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நீங்கள் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது மன இறுக்கத்திலிருந்து விடுபட விரும்பினால், அதற்காக உடற்பயிற்சி செய்யத் தொடங்குவது கடினமாக இருக்கலாம். அதற்கு சோர்வு, தெம்பற்ற மன நிலை, ஆர்வமின்மை போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.
புதிதாக உடற்பயிற்சிப் பழக்கத்தைத் தொடங்க உதவியாக சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் மன இறுக்கத்திலிருந்தும் நீங்கள் விடுபடலாம்:
புதிதாக உடற்பயிற்சிப் பழக்கத்தைத் தொடங்க உதவியாக சில குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் மன இறுக்கத்திலிருந்தும் நீங்கள் விடுபடலாம்:
மெதுவாகத் தொடங்குங்கள் (Start slowly)
ஆரம்பத்திலேயே மிகக் கடுமையான பயிற்சிகளைச் செய்தால் அல்லது நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால், களைத்துப் போய்விடுவீர்கள், அதன் பின் உடற்பயிற்சியைத் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற ஊக்கம் இருக்காது. முதலில் மெதுவாகத் தொடங்குங்கள், படிப்படியாக உங்கள் உடலுக்கு ஏற்ற வேகத்தில் அதிகப்படுத்துங்கள். வாரத்திற்கு 2-3 நாட்கள் 10-15 நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள். ஓரிரண்டு வாரங்கள் இதையே தொடர்ந்து செய்யுங்கள். அதன் பிறகு பயிற்சியை வாரத்திற்கு ஐந்து நாட்களுக்கு, 25-30 நிமிடம் என்று அதிகப்படுத்துங்கள்.
சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளுங்கள் (Break up the session)
ஒரே முறையில் உங்கள் பயிற்சியை முடிக்க வேண்டும் என்றில்லை, அதே போல், ஒரே வகையான உடற்பயிற்சியையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்றும் அவசியமில்லை. ஆர்வம் குறையாமல் இருக்க, ஒரு நாளில் இரண்டு மூன்று முறை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு உடற்பயிற்சிகளைச் செய்யலாம். ஒவ்வொரு பகுதியின்போதும் பயிற்சிகளையும் மாற்றிக்கொள்ளலாம். உதாரணமாக, காலையில் 20 நிமிடம் நடக்கலாம், மாலையில் 15-20 நிமிடம் சைக்கிளிங் செய்யலாம்.
நீங்கள் விரும்பும் உடற்பயிற்சியைத் தேர்வுசெய்துகொள்ளுங்கள் (Pick an exercise which you like)
உங்கள் நண்பர்கள் செய்கிறார்கள் என்பதற்காக ஒரு உடற்பயிற்சியையோ விளையாட்டையோ நீங்கள் தேர்வுசெய்ய வேண்டாம், அல்லது இது நல்லது என்று எங்கோ படித்துள்ளீர்கள் என்பதற்காகவும் ஒரு பயிற்சியைத் தேர்வுசெய்ய வேண்டாம். உடற்பயிற்சியை ஒரு வேலைபோலச் செய்தால், விரைவில் சலிப்பாகிவிடும். எனவே, பல்வேறு செயல்பாடுகளை உடற்பயிற்சிகளாகச் செய்யலாம் உங்களுக்குப் பிடித்த செயல்பாட்டை உடற்பயிற்சியாகச் செய்யத் தேர்வுசெய்யுங்கள்.
நண்பருடன் சேர்ந்து பயிற்சி செய்யுங்கள் (Workout with a friend)
தனியாக உடற்பயிற்சி செய்தால் சலிப்பாகிவிடலாம். உங்களுடன் நண்பர் ஒருவரும் சேர்ந்து பயிற்சி செய்தால் இன்னும் ஊக்கமாகவும் உற்சாகமாகவும் நீங்கள் தொடர முடியும். ஆகவே உங்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஒரு நண்பரைக் கண்டுபிடியுங்கள் அல்லது ஏரோபிக்ஸ், ஜூம்பா, யோகா போன்ற குழுவாகப் பயிற்சி செய்யும் வகுப்புகளில் சேர்ந்துகொள்ளுங்கள். மாலையில் உங்களுடன் நடை பயிற்சி செல்ல உங்கள் பக்கத்து வீட்டுக் காரரையும் அழைத்துக்கொள்ளலாம், அப்படியே அரட்டை அடித்துக்கொண்டே நடந்துவிட்டு வரலாம் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து சைக்கிளிங் செல்லலாம்.
நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருங்கள் (Stay active, whole day)
வழக்கமான உடற்பயிற்சியுடன், தினந்தோறும் உடல் உழைப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்வது மன ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமாகும். ஃபோனில் பேசும்போது நடந்துகொண்டே பேசுங்கள். லிஃப்டில் செல்லாமல் படிகளில் செல்லுங்கள். வேலை செய்யும் போதும் அடிக்கடி இடைவேளை எடுத்து 5-10 நிமிடங்கள் நடக்கவும். மடிக்கணினி வைத்து வேலை செய்யும் போது உடலை நீட்டி மடக்கி எளிய பயிற்சிகளைச் செய்யுங்கள். இந்தப் பழக்கங்களை உங்கள் வாழ்க்கையின் பகுதி ஆக்கிக்கொள்ளுங்கள், சிறிது காலத்தில் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் வித்தியாசத்தை நீங்கள் உணரலாம்.
உடற்பயிற்சி மன இறுக்கத்திற்கு எதிரான மருந்தாக இருக்க பல்வேறு காரணங்களுள்ளன. உடற்பயிற்சியானது நரம்பு சார்ந்த வளர்ச்சியை மேம்படுத்துகிறது, அழற்சியைக் குறைக்கிறது, நன்றாக இருக்கிறோம் என்ற உணர்வையும், அமைதி உணர்வையும் கொடுக்கிறது.
அத்துடன் என்டோர்பின்களையும் உற்பத்தி செய்கிறது, இந்த என்டோர்பின் ஹார்மோன்கள் மிக நன்றாக இருக்கும் உணர்வை அளித்து உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கும். உங்களுக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்தும் எண்ணங்களிலிருந்து சிறிது நேரம் மனதை திசைதிருப்பி அமைதியாக இருக்கவும் உதவுகிறது.
அத்துடன் என்டோர்பின்களையும் உற்பத்தி செய்கிறது, இந்த என்டோர்பின் ஹார்மோன்கள் மிக நன்றாக இருக்கும் உணர்வை அளித்து உங்களுக்கு ஆற்றலைக் கொடுக்கும். உங்களுக்கு மன இறுக்கத்தை ஏற்படுத்தும் எண்ணங்களிலிருந்து சிறிது நேரம் மனதை திசைதிருப்பி அமைதியாக இருக்கவும் உதவுகிறது.
Copyright © 2018 Modasta. All rights reserved
நன்றி:
https://www.modasta.com/ta/health-a-z/mana-azhuthathilirunthu-vidubada-udarpayirchi-eppadi-uthavum/
Compiled
by
Ezhilarasan Venkatachalam
Salem
by
Ezhilarasan Venkatachalam
Salem
Comments
Post a Comment