7 Best Tips To Keep Your Hormones Under Control, Naturally! (TAMIL)
உங்கள் ஹார்மோனை கட்டுப்பாட்டில் வைக்க 7 அருமையான வழிகள்
By Suganthi Ramachandran
ஒரு மனிதனின் உடலில் உடல் அளவிலும், மனதளவிலும் மற்றும் உணர்ச்சி அளவிலுமான செயல்பாடுகள் நடைபெறுகிறது. இந்த மூன்று செயல்களும் சரியாக நடந்தால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கிறது என்று அர்த்தம்.
ஒரு கற்பனையாக வைத்துக் கொள்வோம் உங்களுக்கு பசிக்கவே இல்லை என்றால் என்னவாகும் உங்களுக்கு ஊட்டச்சத்துமின்மை குறைபாடு ஏற்பட்டு விடும் அல்லவா?
அல்லது உங்களால் சிரிக்கவோ, அழுகவோ மற்றும் உணர்ச்சிவசப்படவோ முடியாது என்றால் உங்களால் சாதாரணமாக இருக்க முடியாது அல்லவா?
எனவே இந்த செயல்பாடுகளை எல்லாம் கட்டுப்படுத்துவது தான் ஹார்மோன் ஆகும்.
ஹார்மோன் என்பது ஒரு கெமிக்கல் டிரான்ஸ்மிட்டர். இது தான் நம் உடலின் செயல்பாடுகளை சீராக்குகிறது.
நம் உடலில் பலவிதமான ஹார்மோன்கள் உள்ளன. இவையெல்லாம் வெவ்வேறு செயல்பாடுகளை செய்கிறது. நாளமில்லா சுரப்பிகள், பிட்யூட்டரி சுரப்பிகள், தைராய்டு சுரப்பிகள், கருப்பை, டெஸ்டஸ் இவைகள் தான் ஹார்மோன்களை சுரக்கின்றன. எடை, பசி, உணர்வு, மனநிலை இவற்றை கட்டுப்படுத்துவதோடு செக்ஸ், மாதவிடாய் மற்றும் இனப்பெருக்கம் இவைகள் நடப்பதற்கு காரணமாகவும் உள்ளது.
எனவே இந்த ஹார்மோனின் அளவு சமமாக இல்லையென்றால் அது மிகுந்த உடல் நலக்குறைவை ஏற்படுத்தும்.
எனவே இதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள சில இயற்கையான முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
#1 ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள் :
கெட்ட கொழுப்பு உணவான ஜங்க் புட் போன்றவற்றை சாப்பிடக் கூடாது. ஆரோக்கியமான கொழுப்பு உணவான தேங்காய் எண்ணெய், அவகேடா, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவுகளை சாப்பிட்டால் மிகவும் நல்லது. இந்த வகை உணவுகள் ஹார்மோன்களை கட்டுப்பாட்டில் வைக்கும்.
#2 துளசி :
தினமும் சில துளசி இலைகளை சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது. இதில் உள்ள அடோப்ஜென் நாளமில்லா சுரப்பிகளை தூண்டி சரியான அளவில் ஹார்மோனை சுரக்க செய்கிறது.
#3 சீரண சக்தியை மேம்படுத்துங்கள் :
சீரணிக்கும் ஆற்றல் ஹார்மோன் சமநிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே சீரண மண்டலத்தில் பிரச்சினை இருந்தால் அது ஹார்மோன் சமநிலையின்மையை உருவாக்கும்.
#4 நச்சு கலந்த பொருட்களை தவிருங்கள் :
பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் இவற்றில் எல்லாம் பராபென்ஸ் மற்றும் நிறைய கெமிக்கல்ஸ் உள்ளன. எனவே இதை தினசரி உபயோகிக்கும் பொழுது ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுகிறது.
#5 உடற்பயிற்சி :
தினமும் உடற்பயிற்சி செய்தால் ஹார்மோனின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம். உடற்பயிற்சி செய்வதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து நாளமில்லா சுரப்பிகள் சரியான அளவில் ஹார்மோனை சுரக்க செய்கிறது.
#6 ஆல்கஹால் தவிருங்கள் :
ஆல்கஹாலை அருந்தினால் உங்கள் மூளையில் உள்ள இராசயனத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதுவே உங்கள் ஹார்மோன் சமநிலைக்கு காரணமாக அமைகிறது.
#7 மனஅழுத்தம் :
அதிகமான மனஅழுத்தம் ஹார்மோன் சமநிலையின்மையை உருவாக்குகிறது. எனவே முடிந்த அளவு உங்கள் மனஅழுத்தத்தை குறைப்பதற்கு முயற்சி பண்ணுங்கள்.
மன அழுத்தத்தால் உடலில் கார்டிசோல் ஹார்மோன் சுரக்கிறது. இதனால் ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படுகிறது.
மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி உங்கள் ஹார்மோனை கட்டுப்பாட்டில் வைத்து ஆரோக்கியமான வாழ்வு வாழுங்கள்.
By Suganthi Ramachandran
Published On June 12, 2017
Source :
https://tamil.boldsky.com/health/how-to/2017/tips-keep-hormones-control-015608.html
***
Collected by
Ezhilarasan Venkatachalam
Tamil based Global English Trainer
Salem, South India.

Comments
Post a Comment