# சுண்ணாம்பு
🌸எல்லா வீடுகளிலும் சுண்ணாம்பு இருக்கும். அதை மருந்துபோல் பயன்படுத்தி வந்தார்கள். நேரடியாக சாப்பிட முடியாது என்பதால் வேறு ஏதாவதொரு பொருளோடு சேர்த்து சாப்பிட்டார்கள்.
குறிப்பாக வெற்றிலை பாக்கோடு சேர்த்து பயன் படுத்தினார்கள். இப்போது வெற்றிலை சாப்பிடும் வழக்கமே இல்லை. வீடுகளில் சுண்ணாம்பும் இருப்பதில்லை. கடைகளில்கூட அரிதாகத்தான் கிடைக்கிறது.
🌼சாப்பிட்டவுடன் வெற்றிலை சாப்பிடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நல்லது. அது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருள்.
🌺ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி ஏதாவதொரு உடல்நல குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறு சுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். எலும்புகளும் உறுதியாகும்.
🌹மாணவர்களுக்கு சுண்ணாம்பால் நினைவாற்றல் பெருகும். படிக்கும் மாணவர்களுக்கு கெட்டித் தயிரில் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் நினைவாற்றல் பெருகும். மூளையின் சக்தி அதிகரிக்கும்.. நீர் மோர், ஜூஸ், தண்ணீரிலும் கலந்து கொடுக்கலாம். நல்ல மாற்றம் தெரியும்.
🍁கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக கால்சியம் தேவை. அந்த தேவையை சுண்ணாம்பு பூர்த்தி செய்யும். மாதுளம் பழம் சாற்றில், ஒரு கோதுமையளவு சுண்ணாம்பு கலந்து தினமும் குடிக்கலாம். அதன் மூலம் உடலுக்கு தேவையான சுண்ணாம்பு அதாவது கால்சியம் கிடைப்பதுடன், பிரசவமும் எளிமையாகலாம். அதுமட்டுமல்ல அந்த கால்சியம் குழந்தைக்கும் போய் சேர்ந்து மூளை வலுப்பெற்ற நிலையில் குழந்தை பிறக்கும்.
இப்பொழுதெல்லாம் சுண்ணாம்புக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. உடலில் கால்சியம் பற்றாக்குறை ஏற்பட்டால் கடையில் கால்சியம் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். எந்த மாத்திரையானாலும் அது பக்கவிளைவுகளை தரக்கூடியதுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
🥀இயற்கை முறையில் நாம் சாப்பிடும் கால்சியம் நம் உடலுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு அதிகப்படியாக உள்ளதை வெளியேற்றிவிடும். ஆனால் மாத்திரைகள் அப்படியில்லை. தேவையில்லாத தொந்தரவுகளை உருவாக்கிவிடும்.
🌼பெண்களுக்கு மாதவிடாய் சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வு தரும். ரத்தக் குறைபாடு, அதிக ரத்தப் போக்கு, உடல்வலி, வயிற்று வலி, குறைந்த ரத்தப் போக்கு, உடல் உஷ்ணம், சோர்வு இவையனைத்திற்கும் சுண்ணாம்பு நல்ல தீர்வாக இருக்கும்.
🍊கரும்பு ஜூஸ், ஆரஞ்சு பழரசம், மாதுளம் பழச்சாறு இவற்றுடன் ஒரு கோதுமையளவு சுண்ணாம்பை கலந்து குடித்து வந்தால் எல்லா பிரச்சினைகளும் தீரும். அது போன்று கீழாநெல்லிக்கீரை, வெள்ளை கீரை, கறிவேப்பிலை ரசம் ஆகியவற்றுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடவேண்டும். பற்கள், ஈறுகளில் பிரச்சினை இருந்தால் வெற்றிலை, துளசியுடன் ஒரு துளி சுண்ணாம்பு கலந்து சாப்பிடலாம்.
🍒மிக குறைந்த அளவில் சுண்ணாம்பு கலந்த நீரில் தினமும் வாய் கொப்பளித்து வந்தால் ஈறுகள், பற்கள் பலம்பெறும். தோள்பட்டை வலி, மூட்டு வலி இவற்றிற்கு சிறிது சுண்ணாம்பை துளசி சாற்றில் கலந்து தேய்த்துவிட்டால் வலி மறையும். விஷப் பூச்சிகள் கடித்துவிட்டால் சிறிது சுண்ணாம்பு வைத்தால் விஷம் நீங்கும்.
🍋நல்லெண்ணெய்யில் சிறிது சுண்ணாம்பு கலந்து உடலில் பூசிவிட்டால் கொசுக்கடி, வேர்குரு தழும்புகளிலிருந்து விடுபடலாம். பல்லில் கூச்சம் உள்ளவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு, சுண்ணாம்பு கலந்து கொப்பளித்து வந்தால் பல் கூச்சம் மறையும். பல்லில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்றவைகளுக்கும் இது நல்ல மருந்து.
🥝தொண்டை இனிமையாக இருக்க சுண்ணாம்பு துணைபுரிகிறது. அந்த காலத்தில் பாட்டுப்பாடும் பாகவதர்கள் வெற்றிலைப் பெட்டியை கையோடு வைத் திருப்பதற்கு இதுதான் காரணம்.
🍏பச்சரிசி, மிளகு இவற்றோடு சிறிது சுண்ணாம்பை கலந்து நன்றாகமென்று சாற்றை தொண்டை முழுவதும் பரவும் படி செய்ய வேண்டும். அபார குரல்வளம் கிடைக்கும். அந்தக்கால மேடைநாடக நடிகர்கள் கைவசம் வைத்திருக்கும் மருந்து இது. வெற்றிலையில், தேன் தடவி, கிராம்புடன் சிறிது சுண்ணாம்பு சேர்த்து மென்று சாற்றை தொண்டையில் பரவவிட்டால் தொண்டை வளமாகும். அந்தச் சாறு நுரையீரல் முழுவதும் பரவி சளி தொந்தரவை போக்கும். மேடையில் பாடுபவர்களுக்கு இது சிறந்த நிவாரணி.
🍄குளிர்காலத்தில் தொண்டை கட்டிக்கொண்டால் முருங்கைச் சாற்றுடன் கொஞ்சம் சுண்ணாம்பை குழைத்து தொண்டையின் வெளிப்புறத்தில் பரவலாக பூசிவிட வேண்டும். தொண்டை கமறல் நீங்கிவிடும். சுண்ணாம்பை நேரிடையாக சாப்பிட முடியாது. அதைப் பதப்படுத்தி சாப்பிடும் பக்குவத்தில் கடைகளில் விற் கிறார்கள். கலர் சேர்க்காத வெள்ளை சுண்ணாம்புதான் சிறந்தது.
🌷இது ஆண்மை விருத்திக்கு நல்லது என்று கூறப்படுகிறது. விந்தணுக்கள் குறைவாக உள்ளவர்கள் கரும்பின் சாற்றில் சிறிது சுண்ணாம்பு கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
🌻பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. பெண்கள் சுண்ணாம்பை ஏதேனும் ஒரு உணவுப் பொருளுடன் கலந்து சாப்பிடலாம்.
🍈இன்று நாம் உபயோகிக்கும் சுண்ணாம்பு கடல் சிப்பியிலிருந்து எடுக்கும் சுண்ணாம்பு அல்ல.
சுண்ணாம்பு கற்களை நீர்த்தி எடுக்க படுபவை கடல் சிப்பிகளிலிருந்து உண்டாக்கபட்ட சுண்ணாம்பு அது தான் உண்ண தகுந்தவை மருத்துவ குணம் வாய்ந்தது.
🥜அது விலை சற்று அதிகம் என்பதால் அந்த சுண்ணாம்பை உபோகிக்காமல் இருந்துவிட்டோம்
🌰சிப்பிசுண்ணாம்பு தான் மருத்துவ குணம் கொண்டது. இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது.
🍃வெற்றிலை உடன் பாழாய் போன புகையிலையும் சேர்த்து போடுபவர்களுக்குதான் தொன்டை மற்றும், வாய்...
புற்று நோய் வந்தது...
Please check with experts before following the above tips.
Thanks to
Uncle Dhayalan, Sirumugai.
Collected by
Ezhilarasan Venkatachalam
Global Tamil Based English Trainer
Salem
Comments
Post a Comment