Skip to main content

Posts

Showing posts from April, 2019

Grateful Brain ALEX KORB Venkatachalam salem health TIPS library

  Gratitude, particularly if practiced regularly, can keep you healthier and happier. (Abridged version). Written by Alex Korb Ph.D. =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= சுறுக்கமாக தமிழில் சில பகுதிகள் மட்டும் (*) அடிக்கடி நன்றி உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் கூடுதல் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்களாம்.    (*) தினமும் 15 நிமிடம் படுக்க செல்லும் முன்பு, யாரையாவது அல்லது எந்த சம்பவத்தை யாவது நன்றி உணர்வுடன் சில வரிகள் எழுதியவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக ஓர் அளவு மாறி உள்ளதாம். (*) நன்றி உணர்வு மனப்பான்மை மூளையில் உள்ள ஹைப்போ தாளமஸ் (hypothalamus) என்ற பகுதியில் நிறைய செயல்பாடுகளை செய்ய துண்டுகிறதாம். இந்த பகுதி தான் நாம் சாப்பிட, தூங்க, மது குடிக்க போன்ற பல செயல்களை நாம் செய்ய அடிப்படை கட்டளைகளை இடுகிறதாம்.  **  தமிழில் இணையான கட்டுரையை படிக்க .. இதை அழுத்தவும் CLICK HERE FOR .. Equivalent Tamil article **CAUTION : This is a very short version chunked by me with great efforts from the original article titled "The Grateful Br...

Dangers in mobile usage Dr Salini Tamil Venkatachalam health TIPS LIBRARY

Dangers in mobile phone usage ஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை! - உளநல நிபுணர் ஷாலினி பேட்டி போதை வசப்படும் பொருட்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது செல்போன். குழந்தைகளும் இளைஞர்களும் கவனத்தைச் சிதறவிடுகிறார்கள். பெண்களுக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் விஷயமாக செல்போன் மாறியிருக்கிறது. செல்போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் உளநல நிபுணர் ஷாலினி. செல்போனுக்கு ஒருவர் அடிமையாகிவிட்டார் என்பதை எப்படி  அறிந்துகொள்வது? தனிமையில் இருப்பவர்களுக்கும் அதிருப்தியான உறவுநிலையில் இருப்பவர்களுக்கும் கையில் செல்போன் இருக்கும்போது, அது ஒரு அடிமைப்படுத்தக்கூடிய வஸ்துவாக மாறிவிடுகிறது. ஒரு பொருளைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும்போது அந்தப் பயன்பாட்டின் அளவு அதிகரிப்பதைத்தான் அடிமைப்படுத்தும் நிலை என்கிறோம். காலையில் எழுந்தவுடனே போனைக் கையில் எடுப்பது, இந்தப் பழக்கத்தைப் பற்றி யாராவது பேசினால் கோபம் வருவது போன்றவை ஒருவர் செல்போனை எந்த அளவுக்குச் சார்ந்திருக்கிறார் என்பதைக் காட்டும். இத்தனைக்குப் பிறகும்...

Easy ways to FIGHT DEPRESSION? Tamil Venkatachalam health TIPS library

எதையும் ‘மூடு’ பார்த்துத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது, யாரிடமும். சரி, இந்த ‘மூடு’ பற்றி என்றைக்காவது யோசித்திருக் கிறீர்களா?  ‘மூடு’ என்பதை மனநிலை என்று மொழிபெயர்க்கலாம். நல்ல மனநிலையைப் பற்றி யாரும் கவலைப்படப்போவதில்லை. சில சமயங்களில் கவலை, கோபம், வருத்தம், சோம்பல் போன்ற தீய மனநிலைகள், நாள் கணக்கில் நீடிப்பது உண்டு. அதை எப்படி நீடிக்கவிடாமல் செய்வது? எளியவழிகள் 1.   தீய மன நிலையை நல்லதாக மாற்ற மூச்சுவாங்கவைக்கிற உடற்பயிற்சிகள் உகந்தவை.  அப்போது அதிக அளவில் ஆக்சிஜன் உடலுக்குள் பாயும். இதயம் படபடவென்று அடித்துக்கொண்டு உடல் முழுவதும் ரத்தம் வேகமாகப் பரவும். இருபது நிமிடங்களாவது வேகநடை, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல்,மெல்ல ஓடுதல், கயிறு தாண்டுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். 2.   உடலுக்கு வைட்டமின்கள் வலுவூட்டுவதைப் போல வண்ணங்கள் மனதுக்கு வலுவூட்டும். மனதில் கோபமும் எரிச்சலும் உள்ளபோது, சிவப்பு நிறப் பொருட்களைப் பார்க்காமல் தவிர்க்கலாம்.  மனச்சோர்வின்போது கருப்பு, கரு நீலம் ஆகிய நிறங்கள் அதை அதிகமாக்கும் . பிரகாசமும் விறுவிறுப்பும் கொண்ட நிறங்கள் மனத...

Whatsapp excess usage danger Tamil Venkatachalam Salem health tips LIBRARY

மாணவர்கள், இளைஞர்களை அடிமைகளாக்கும் 'வாட்ஸ்அப்': மனநல பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர் எச்சரிக்கை சமூக வலைதளங்களை உபயோகிப்பது தற்போது மாணவர்கள், இளைஞர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக மாறிவிட்டது. இதில் செல்போனில் ‘வாட்ஸ்அப்’ பயன் படுத்துவது உச்ச கட்டமாகி விட்டது. தொழில் ரீதியாகவும், பொழுது போக்காகவும் ஆரம்பித்த இந்த ‘வாட்ஸ்அப்’ பயன்பாடு, தற்போது ஒரு போதைப்பொருளாகவே மாறிவருகிறது. இளைஞர்கள் இன்று வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாள் முழுவதும் மூளையை கசக்கி ‘வாட்ஸ்அப்’பில் குறுஞ்செய்தி, வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் அதீத நாட்டம் கொள்கின்றனர். வாட்ஸ்அப்பில், ஒவ்வொருவரும் ஒரு குழுவைத் தொடங்கி, ஆரம்பத்தில் அன்றாட முக்கிய நிகழ்வுகள், நகைச்சுவை செய்திகள் அனுப்பத் தொடங்கிய அவர்கள், தற்போது உச்சமாக ஆபாச வீடியோ, புகைப்படங்களை அனுப்பி அதற்கு நாள் முழுவதும் அடிமையாகி விட்டனர். அதனால் இளைஞர்கள், மாணவர்களால் இன்றைய அவசர வாழ்க்கையிலும், ஒருநாள்கூட செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ‘வாட்ஸ்அப்’ உபயோகிக்க இயலாத நேரங்களில் எரிச்சல், பதற்றம், எதையோ இழந்த உணர்வு...

Depression arresting people Tamil Dr GANESAN g Venkatachalam Salem health tips library

மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம் -கு.கணேசன் (June 2017) உலகிலேயே மன அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா?  இந்தியாதான்.  2011-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேரிடம் காணப்பட்ட மன அழுத்தம் 2015-ல் 100-க்கு 20 பேரிடம் காணப்படுவதாகவும், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50-%க்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.   தமிழ்நாட்டின் நிலைமை 10%. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மன அழுத்தம் ஒரு தேசியப் பிரச்சினை ஆகிவருகிறது என்றும் அது எச்சரித்துள்ளது. மன அழுத்தமானது தனிப்பட்ட ஒரு மனிதரின் மன நலப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இந்தப் பாதிப்பின் ஆரம்பகட்டத்தில் குடும்ப வேலை, அலுவலக வேலை போன்ற சாதாரண வாழ்வியல் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவார்கள். ஆனால், காலப்போக்கில் உடல் நலம் குறைவதும், உறவுகள் சிதைவதும், ஒட்டு மொத்த சமூகமே எதிரியாவதும் தவிர்க்க முடியாத தாகிவிடும்.  நாள்பட்ட மன அழுத்தம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையே சீர்குலைத்து விடுகிற ஆபத்து நிற...

Depression crippling disease Tamil Dr godson Venkatachalam Salem health tips library

Depression crippling disease Tamil Dr Godson Venkatachalam salem health tips வாழ்க்கையை முடக்கும் நோய்களில் ‘மன அழுத்தம்’ முதலிடம் பிடிக்கும்: உலக சுகாதார தினத்தில் அதிர்ச்சி தகவல் ஒய்.ஆண்டனி செல்வராஜ் . . வரும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அரிதான நோய்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவு மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கு பதினைந்து பேரை பாதிக்கும் மன அழுத்த நோயானது இன்னும் விழிப்புணர்வு குறைந்த, சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நோயாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘மன அழுத்த நோயைப் பற்றி பேசுவோம்’என்பதே நாளை (ஏப்.7) உலக சுகாதார தினத்தின் மையக் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, தற்போது மக்களின் வாழ்க்கையை முடக்கும் நோய்களில் இதய நோய்கள் முதலிடம் வகிக்கின்றன. ஆனால் 2020-க்கு பிறகு மன அழுத்த நோய் அந்த இடத்தைப் பிடித்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக மாறி வருகிறது...

Depression prevention Tamil prof venkatapathi Venkatachalam Salem health tips sandwich

வணிக நூலகம்:  உணர்வுகள் மேம்பட வேண்டும் பேராசிரியர் ஆர். வேங்கடபதி ஃப்ரிடு (FREUD) என்ற உளவிய ளாலார் தவறுகளை ஏற்றுக் கொண்டவர்களை சரி என்றும், மறுத்தவர்களை தவறு என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால், டேவிட் பர்ன்ஸ் (DAVID BURNS) என்ற இந்த நூலாசிரியர் தவறுகளை ஏற்றுக் கொண்டவர்களை மறுத்தும், சரி என்று ஒப்புக் கொண்டவர்களை உணர்வுகள் மேம்படும் வகையில் உருவாவார்கள் என்றும் வகைப்படுத்தினார். மன அழுத்தம் என்பது அறிந்தும் அறியாதது, தெரிந்தும் தெரியாதது. நல்ல உணர்வு களைக் கொண்டிருப்பதைப் போன்ற மோசமான எழுச்சி நிலையாகும். . . மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களை பற்றிய எண்ணங்களையும், அவர்களுடைய உண்மையான வெற்றி களையும் மாறுபாடான கோணத்தில் அணுகுவார்கள். மன அழுத்தம் என்பது எதிர்மறையான சரியில்லாத எண்ணங்களின் சுழற்சியாகும். அது போன்ற சுழற்சிகள் மனச்சோர்வுகளை அதிகரிக்கும். மனச்சோர்வு என்ற வட்டத்திற்குள் சென்றவர்கள் மன அழுத்தம் என்ற சுழற்சியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டிது தான். இந்த உள்ளுணர்வுகள் எண்ணங் களின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்து வதற்கு தேவையானதாக அமையும். எண்ணங்கள் மூலம் மாற்றங்கள்...

Sit and work full day is bad Tamil Venkatachalam health tips

அமர்ந்தே வேலை செய்வது ஆபத்தா? - என் பணி நிமித்தம் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு அமர்ந்தே வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் ஆரோக்கியம் கெடும், பல நோய்கள் வரும் என்று பயமுறுத்துகிறார், என் நண்பர். அவர் சொல்வது சரியா? உங்கள் நண்பர் கூறுவது மிகவும் சரி. நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களில், அமர்ந்தே வேலை செய்வது என்பது தற்போது கவனிக்கப்பட வேண்டிய பட்டியலில் சேர்ந்துவிட்டது.  கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கும் ரிமோட், மடிக்கணினி போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகளால், அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்து வேலைகளையும் செய்ய முடிவதாலும், தங்களுக்கு வழங்கப்பட்ட அலுவலகப் பணியைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தாலும், தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்வது அவசியமாகிவிட்டது.  இவர்கள் இடையிடையே எழுந்திருப்பதும், நடப்பதும் குறைந்துவிட்டது. அரை நூற்றாண்டுக்கு முன்புவரை இம்மாதிரியான பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைத்த உடல் அசைவுகள் இப்போது இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவ்வாறு பல மணி நேரத்துக்குத் தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு, தினமும் ...

PSYCHOLOGY IN TAMIL MENU 0423 Venkatachalam salem

PSYCHOLOGY IN TAMIL  MENU 0423 Venkatachalam salem  மனோ தத்துவம்    அட்டவணை 0423  ** ·     01  வாழ்க்கையை முடக்கும் நோய்களில்  ‘ மன அழுத்தம் ’  முதலிடம் பிடிக்கும்: //  DEPRESSION Crippling Us ... 02  மக்களைச் சிறைப்படுத்தும்    மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம் //  Depression Arresting .  03  மாணவர்கள் ,  இளைஞர்களை அடிமைகளாக்கும்  ' வாட்ஸ்அப் ': / // Dangers in whatsapp  ... ·    04  உணர்வுகள் மேம்பட வேண்டும் //  Depression Prevention  ·      05  தற்கொலைககு தூண்டும் ஆன்லைன் விளையாட்டுக்கான   // ONLINE GAMES 17 Aug 2017... ·        06  ஆளைக் கொல்லும் ஆன்லைன் கேம் //  Online Games are dangerous 2 Aug 2017  .      07  குழந்தையை பிடிவாத குணமில்லாமல் வளர்ப்பதற்கு டாக்டர் ஜெயந்தினி   // Childcare Jayathini      08  ஏட்டுக்...

Danger in mobile Tamil psychology Venkatachalam Salem

கதை சொல்லுமா கைபேசிகள்? குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதற்கு முன்பே, வீட்டிலேயே கற்கத் தொடங்கி விடுகிறார்கள். குறிப்பாக, குழந்தைப் பருவத்தில் யாரிடம் அதிக நேரம் செலவழிக்கின்றார்களோ, அவர்கள்தான் முதல் ஆசிரியர்கள். அவர்கள் கற்றுக்கொள்வதில் நல்லது - கெட்டது என எல்லா விஷயங்களுமே உள்ளடங்கும். முன்பெல்லாம் குழந்தைகள் தாத்தா - பாட்டிகளுடன் நேரத்தைச் செலவழிக்கும் வாய்ப்பு இருந்தது. அவர்களும் குழந்தை கள் சளைக்காமல் கேட்கும் கேள்விகளுக்குத் தங்களுக்குத் தெரிந்தவரை அறிவுபூர்வமாகப் பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். எனக்குத் தாத்தா உடனான ஒவ்வொரு தருணமும் நிச்சயமாக சிந்தனையைத் தூண்டியிருக்கிறது. அவர் அந்தக் காலகட்டத்தின் செய்திகளையும் கூட எனக்குக் கதையாகச் சொல்லியிருக்கிறார். “ஜப்பான்காரன் ஏரோபிளேன்ல இருந்து அமெரிக்கக் கப்பல்கள் மேல குண்டு போடும்போது ஒரு கப்பலை மட்டும் நெருங்க முடியல. கடைசில ஒரு ஜப்பான்காரன் குண்டு நிரப்புன ஏரோபிளேனோட கப்பல் புகைபோக்கிக்கு உள்ள விழுந்து கப்பலை நொறுக்கிட்டான்” என்று இரண்டாம் உலகப் போரின் நிகழ்வுகளை என் தாத்தா கதையாகச் சொல்லி யிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்புத...

TEN TIPS TO REDUCE STRESS VENKATACHALAM SALEM HEALTH TIPS

Follow these 10 simple tips to help manage and REDUCE YOUR STRESS LEVELS (Translation sandwiched version 02) உங்கள் மன அழுத்த அளவை சமாளிக்கவும் குறைக்கவும் உதவும்  இந்த 10 எளிய உதவிக் குறிப்புகளைப் பின்பற்றவும். 1. Avoid Caffeine, Alcohol, and Nicotine. ....காஃபின், ஆல்கஹால் (மது) மற்றும் நிகோடின் (சிகரெட்) ஆகியவற்றை தவிர்க்கவும். Avoid, or at least reduce, your consumption of nicotine and any drinks containing caffeine and alcohol. Caffeine and nicotine are stimulants and so will increase your level of stress rather than reduce it. .... உங்கள் நிகோடின் நுகர்வு மற்றும் காஃபின் மற்றும் ஆல்கஹால் கொண்ட எந்த பானத்தையும் தவிர்க்கவும், அல்லது குறைந்தபட்சம் குறைக்கவும்.   காஃபின் மற்றும் நிகோடின் ஆகியவை உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். 2. Indulge in Physical Activity உடல் செயல்பாடுகளில் ஈடுபடுதல் எக்சசைஸ் செய்யுங்கள். Stressful situations increase the level of stress hormones such as adrenaline and cortisol in your body. .....மன அழுத்த சூழ்நிலைகள் உங்கள் உடலில் "அட...

Owning a pet makes you healthy Venkatachalam Salem health TIPS

Top 5 Health Benefits of Owning a Pet (mix) செல்ல பிராணி வளர்ப்பதால் ஒருவருக்கு கிடைக்கும்  5 முக்கிய உடல் நல நன்மைகள் =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= An apple a day may or may not actually keep the doctor away.  But what about an animal a day? ஒரு நாளன்று ஒரு ஆப்பிளை சாப்பிட்டு வந்தால்  உண்மையில் டாக்டரிடம் செல்ல தேவை இருக்காது என்பார்கள். Now, that's a different story. In fact, when it comes to pet ownership, there are a number of proven health benefits for people. ஆனால் இப்போது, ​​அது வேறு கதை. உண்மையில், விலங்கு உரிமையாளர் பற்றி வரும்போது, ​​மக்களுக்கு நிரூபிக்கப்பட்ட பல நன்மைகள் உள்ளன. It includes physical, mental and emotional improvements,  enhancing social skills. It also decreases a person's risk of heart attack. இதில் உடல், மன மற்றும் உணர்ச்சி மேம்பாடுகள், சமூக திறன்களை மேம்படுத்துதல் போல பல நன்மைகள் உள்ளன. மேலும்  செல்ல பிராணி வளர்ப்பதால்  ஒருவருக்கு மாரடைப்பு வருவது குறைகிறது. 01 Does the idea of cuddling with a pet to help war...

Just Smile In the Mirror daily Venkatachalam salem health tips

Daily Afternoon Ritual: Smile In the Mirror சுறுக்கமாக : தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நமக்கு நல்லதாம் Theresa Cheung, author of "21 Rituals to Change Your Life," invites you to try a simple ritual for 21 days and find out how small actions can change your life. You are never fully dressed without a smile is how the saying goes and morning ritual number five completely agrees. We often think of a smile as a natural response to feel good emotions but did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? Research done by psychology and facial coding expert Paul Ekman and backed up by recent research* published in Psychological Science found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. All this research points to one simple but wonderful conclusion: smiling will make you feel better. (Frowns actually have the op...

Giving thanks can make you happier Venkatachalam Salem health tips

Giving thanks can make you happier Venkatachalam Salem health tips Equivalent Tamil article November kicks off the holiday season with high expectations for a cozy and festive time of year. However, for many this time of year is tinged with sadness, anxiety, or depression. Certainly, major depression or a severe anxiety disorder benefits most from professional help. But what about those who just feel lost or overwhelmed or down at this time of year? Research (and common sense) suggests that one aspect of the Thanksgiving season can actually lift the spirits, and it's built right into the holiday — expressing gratitude. The word gratitude is derived from the Latin word gratia, which means grace, graciousness, or gratefulness (depending on the context). In some ways gratitude encompasses all of these meanings. Gratitude is a thankful appreciation for what an individual receives, whether tangible or intangible. With gratitude, people acknowledge the goodness in their liv...