Skip to main content

translation - How to get good sleep?

Tips for getting good sleep

கீழ்க்கண்ட வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றினால், நல்ல தூக்கம் உங்களை ஆரத்தழுவிக்கொள்ளும்:

Tips for getting good sleep.


1] பகல் தூக்கம் 30-40 நிமிடங்கள் போதும்.

Restrict your daytime sleep to 30 to 50 minutes.

2] மாலையில் செய்யும் உடற்பயிற்சி இரவில் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

Exercises done in the evening will induce good sleep in the night.

3] தூக்கத்தைக் கெடுக்கும் மாத்திரையைத் தவிருங்கள் அல்லது மாலையிலேயே எடுத்துக் கொள்ளுங்கள். உதாரணம்: அதிக சிறுநீர் வெளியேறக் காரணமாக இருக்கும் மாத்திரைகள்.

Avoid eating certain tablets that  generates excess urine or eat them in the evening itself.

4] இரவு எட்டு மணிக்கு மேல் காபி, மது, புகைப்பிடித்தல் கூடவே கூடாது.

Avoid drinking coffee, tea or alcohol after 8 pm. Also avoid smoking.

5] படுப்பதற்கு முன்பு வெந்நீரில் குளித்துவிட்டு வெதுவெதுப்பான பால் அருந்தினால் நல்ல தூக்கம் வரும்.

Before you go to bed, drinking  lukewarm milk after taking a hot water bath will induce good sleep.

6] வெதுவெதுப்பான பாலில் இரண்டு டீஸ்பூன் தேனுடன் ஒரு டீஸ்பூன் பொடி செய்யப்பட்ட கசகசாவைக் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும் என்று சித்த மருத்துவம் சொல்கிறது.

Siddha medicine says mixing two teaspoons of honey and one teaspoon of poppy seeds (gasa gasa) powder in a tumbler of milk will induce good sleep.

7] தினமும் குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

Maintain the habit of going to sleep at a particular time.

8] படுக்கையறை அமைதியான சூழ்நிலையில் சற்று மங்கிய வெளிச்சத்துடன் இருப்பது நல்லது.

Let your bedroom have dim lights and a calm environment. 

9] படுக்கும் இடத்தைத் தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

Use your sleeping place only for sleeping.

10] படுக்கை அறையில் டிவி பார்ப்பதையோ, புத்தகம் படிப்பதையோ, வானொலி கேட்பதையோ தவிர்ப்பது நல்லது.

It is good to avoid watching TV or reading books or hearing a radio in your bedroom.

11] படுத்தவுடனே 30-லிருந்து 45 நிமிடங்களுக்குள் தூக்கம் வரவில்லை என்றால் வெளியே சென்று சற்று நடந்துவிட்டு வரலாம் ....

அல்லது படிப்பது, வானொலி கேட்பது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். தூக்கம் வர ஆரம்பித்த உடனேயே படுக்கைக்குச் சென்றுவிட வேண்டும்.

If you don't fall asleep even after 30 to 40 minutes in bed, then get up and go out for a walk. Or do some activities like reading a book or hearing a radio. But immediately on getting sleep you should go to bed. 

12] மன உளைச்சல்களும் கவலைகளும் தூக்கத்தின் எதிரிகள். அவற்றைத் தவிர்க்க அரை மணி நேரம் தியானம் செய்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றால் ஆழ்ந்த தூக்கம் நிச்சயம்.

Worries that spoil your peace of mind are the barriers for your sleep. Doing meditation for 30 minutes before going to bed, will be helpful.

13] 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் பல தொல்லைகளால் சிரமப்படும்பொழுது மன அமைதிக்கான மாத்திரையோ, தூக்க மாத்திரையோ மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது தவறில்லை.

People who are older that 70 years age and struggling with lot of problems, may eat calmness inducing tablets or sleep inducing tablets under the guidance of doctors.

டாக்டர் வி. எஸ். நடராஜன்.

கட்டுரையாளர், மூத்த முதியோர் நல மருத்துவர்

பத்மஶ்ரீ பரிசு பெற்றவர். 

Dr. V.S. Natarajan

Writer, 

Aged People's Health Care Specialist

Padma Sree Recipient.

தொடர்புக்கு: dr_v_s_natarajan@yahoo.com

-=-=-=-

தலைப்பு 

தூக்கத்தை ஆரத்தழுவ வேண்டுமா ?

டாக்டர் வி. எஸ். நடராஜன்.

நன்றி : தி இந்து தமிழ் திசை நாளிதழ்

12 மார்ச் 2022

-=-=-=-

Thanks to : Tamil the Hindu newspaper

12 March 202

Source :

https://www.hindutamil.in/news/supplements/nalam-vazha/776482-world-sleep-day-march-18-need-to-radiate-sleep.html

ONLY FOR EDUCATIONAL PURPOSES

Compiled by

Ezhilarasan Venkatachalam Salem



Comments

Popular posts from this blog

Translation - Just Smiling In the Mirror daily in good - Venkatachalam Salem

Daily even smiling at ourself is good. தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நல்லதாம்.  We often think of a smile as a natural response to feel good emotions. /  நல்ல உணர்ச்சிகளை வெளிக்காட்ட அல்லது உணர  புன்னகையை இயற்கையான பதிலாக நாம்  நினைக்கின்றோம். But did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? /  ஆனால் புன்னகை -- அந்த புன்னகை போலியானதாக இருந்தாலும் -- உங்கள் மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? Just Smile In the Mirror daily. /  தினமும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து சிரிக்கவும். Research found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. /  கண்களைச் சுற்றியுள்ள முகத் தசைச் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு பெரிய புன்னகை, நம் மூளை செயல்பாட்டில் மற்றும் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. All this research points to one...

7 Scientifically Proven Benefits Of Gratitude // Ezhilarasan health tips

 "7 Scientifically Proven Benefits Of Gratitude That Will Motivate You To Give Thanks Year-Round" TRANSLATION  Written by Amy Morin நன்றிக்கடன்  மனப்பான்மையும் அதனால் கிடைக்கும் 7_நன்மைகளும் (அல்லது)   ஆண்டு முழுவதும் நீங்கள் மற்றவர்களுக்கு நன்றி தெரிவிக்க உங்களை ஊக்குவிக்க அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட 7_நன்மைகள் / உண்மைகள் (சுருக்கப்பட்ட வடிவம்) ஆங்கிலத்தில் எழுதியது ஆமி மோறின் Developing an “attitude of gratitude” is one of the simplest ways to improve your satisfaction with life. /  உங்கள் வாழ்க்கை திருப்தி நிறைந்ததாக இருக்க ஒரு சுலபமான வழி ... நன்றிக் கடன் மனப்பான்மையை அல்லது அணுகுமுறையை வளர்த்துக் கொள்வது தான் . In fact, gratitude may be one of the most overlooked tools that we all have access to every day. /  உண்மையில்,  "நன்றிக்கடன்    மனப்பான்மை" என்ற "கருவி" மேல் நாம் போதிய கவனம் செலுத்த தவறிவிட்டோம் என்று கூறலாம். Cultivating gratitude doesn’t cost any money and it certainly doesn’t take much time, but the benefits ...