நண்பர்களே, இன்றய ..16-09-2018 ....தி இந்து.. நியூஸ் போப்பரில் நான் பல மாதங்களாக சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையில் பலரிடம் நான் புலம்பிய ஒரு விஷயத்தை இந்த ஆண்டிற்கான அவர்களுடைய ... "ஃபோக்ஸ். பாயிண்டாக" ...மையக் கருவாக அந்த நாளிதழ் எடுத்து உள்ளது எனக்கு ஒரு சிறிய மகிழ்ச்சியை கொடுத்தது.
எழிலரசன் வெங்கடாசலம்
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
இதோ அதில் இருந்து ...
தமிழ் திசை ~16.09.2018 (ஞாயிறு) நாளிதழில் இருந்து ... அன்பிற்கினிய வாசகர்களே,
உங்கள் அன்பு, ஆதரவுடன் ஆறாம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது உங்கள். இந்து. நாளிதழ். தமிழ்ச் சூழலில் கடந்த ஐந்தாண்டுகளில் நாம் மேற்கொண்ட முன்முயற்சிகளின் உச்சம் ஐந்தாம் ஆண்டில் நிகழ்ந்தது. எந்தவொரு பத்திரிக்கையும் செய்யத் தயங்கும் பெயர் மாற்றத்திற்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டது நம்முடைய நாளிதழ். "தி இந்து" உங்களுடைய தொடர் வேண்டுகோளின் தொடர்ச்சியாக. "இந்து தமிழ் திசை" ஆனது. அதை இரு கரம் நீட்டி உற்சாகத்துடன் நீங்கள் வரவேற்றது, நம் நாளிதழ் மீது நீங்கள் கொண்டிருக்கும் நன்மதிப்புக்கான இன்னொரு உதாரணம்.
வயது, வாசகர்கள் எண்ணிக்கை ஏற ஏற பொறுப்பும் மேலும் மேலும் கூடுகிறது என்பதை உணர்ந்தே இருக்கிறோம். ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில் முதல் நாள் அன்று நாம் தீர்மானித்துக் கொண்ட இலக்குகள், விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டுகள், எடுத்துக் கொண்ட உறுதி மொழிகள், யாவற்றோடும் வரவிருக்கும் காலத்தின் சவால்களையும் எண்ணிப் பார்க்கிறோம். இதோ இன்று எங்களை இன்னும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்கிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி -- செய்திகள் -- கட்டுரைகள் -- நிகழ்வுகள் -- வாயிலாக அந்த ஆண்டு நெடுக்கிலும் அது குறித்த முழுமையான அறிதலையும், புரிதலையும் வாசகர் மத்தியில் உறுவாக்குவது. இந்து தமிழ் கடைபிடித்து வரும் செயல்திட்டம்.
=========
அந்த வரிசையில், அண்மைக்காலமாக நம்மையெல்லாம் மிரட்டிக் கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொள்ளதர்கான முயற்சியைக் கையில் எடுக்கிறோம். அளவற்ற, கட்டுப்பாடு அற்ற இணைய பயன்பாடு; செல்பேசி கலாச்சாரம் தான் அது!
"உலகை மேம்படுத்தவும் மேலும் வசதியாக்கவுமே தொழில்நுட்பம். ஆனால், கருவிகளை நாம் கையாள்வதற்கு பதிலாக, பழக்கத்தின் போக்கில் கருவிகள் நம்மைக் கையாளத் தொடங்கினால் ..?
வரங்களே சாபமாக மாறுவது தான் மிஞ்சும்.
ஏற்கனவே இது தொடங்கிவிட்டது.
குடும்பங்கள் இன்று பிளக்கின்றன. ஆளுக்கொரு செல்பேசியுடன், வீட்டுக்குள்ளேயே ஒவ்வொரு மனிதரும் தனித்தனி தீவுகளாக மாறி வருகின்றனர். சேர்தார்போல அரை மணி நேரம் ஒரு விஷயத்தை வாசிப்பது, ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பது, ஓர் உறையைக் கேட்பது என்கிற தொடர் கவனிப்புப் பண்பு மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்து விட்டது.
பரபரப்புக்கு ஏங்கும் மனங்கள், போலிச் செய்திகளை நாடுகின்றன. வதந்திகளையே அதிகம் நம்பவும் விவாதிக்கவும் விரும்புகின்றன. வக்கிரங்களைப் பரப்ப விழைகின்றன.
இதிலிருந்து எல்லாம் தற்காத்துக் கொள்வதற்கான வழிகளில் இந்த ஆண்டு நம் தனி கவனத்தை செலுத்த இருக்கிறோம்.
*** *** ***
கே.அசோகன்
ஆசிரியர்
நன்றி :
தமிழ் திசை ~16.09.2018 (ஞாயிறு)
Re-typed in Tamil and circulated for the welfare of the society by
Ezhilarasan Venkatachalam
Tamil based English Trainer, Salem.
=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=
Thanks to
My HCMS78 friends : Manohar, Asgari, Prakash, Shabbir, Sabarinathan and Radhakrishnan
Who have been constantly supporting me and had enabled me to do good. INDEBTED TO THEM and other HCMS78 guys too.
##-##-##-##-##-##-##-
Translation of my INTRODUCTION to above script in Tamil, for those who don't know Tamil.
Friends,
Title : "Smartphones are CAPTURING OUR LIVES. And how to safeguard ourselves from the danger"
Tamil newspaper THE HINDU or "HINDU TAMIL THISAI" resolved on 16-09-2018 (Sunday) that for one full year they are going to focus on the subject : "Smartphones are CAPTURING OUR LIVES and how to safeguard ourselves from the danger"
Glad that a giant, my favourite Tamil newspaper "Hindu Tamil Thisai" had "stolen" my agenda.
I HAD TYPED IT METICULOUSLY
FOR THE BENEFIT OF ALL.
READ, RELISH, SHARE.
Soon you can see the English translation of the above matter in my blog
http://e3translation.blogspot.com
-
THANKS To
.
Soon you can see the English translation of the above matter in my blog
http://e3translation.blogspot.com
-
THANKS To
.
Comments
Post a Comment