Skip to main content

Cardamom or yelakkai / Health tips by Ezhilarasan

 cardamom or yelakkai -Health benefits of

1.ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடலா‌ம். ப‌சியே ஏ‌ற்படுவ‌தி‌ல்லை, சா‌ப்‌பிட
 ‌‌பிடி‌க்க‌வி‌ல்லை எ‌ன்று கூறுபவ‌ர்க‌ள், ‌  ஒரு ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்றா‌ல், ப‌சி எடு‌க்கு‌ம். ‌ஜீரண உறு‌ப்பு‌க‌ள் ‌சீராக இய‌ங்கு‌ம்.

2.நெ‌ஞ்‌சி‌ல் ச‌ளி க‌ட்டி‌க் கொ‌ண்டு மூ‌ச்சு ‌
 ‌சிரம‌ப்படுபவ‌ர்களு‌ம், ச‌ளியா‌ல் இரும‌ல் வ‌ந்து, அடி‌க்கடி இரு‌மி வ‌யி‌ற்றுவ‌லி வ‌ந்தவ‌ர்களு‌க்கு‌ம் கூட ஏல‌க்கா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமையு‌ம். ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌‌ட்டாலே, கு‌த்‌திரு‌ம்ப‌ல், தொட‌ர் இரு‌ம‌ல் குறையு‌ம்.
வா‌‌ய் து‌ர்நா‌ற்ற‌ம் ஏ‌‌ற்படுவத‌ற்கு‌ம்  ‌ஜீர ண உ‌று‌ப்புக‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம்
 ‌பி‌ர‌ச்‌சினை தா‌ன் காரண‌ம். எனவே வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தை‌ப் போ‌க்க ஏல‌க்காயை மெ‌ன்று சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

3.சா‌ப்‌பிடு‌ம் உணவு வகைக‌ளி‌ல்
 ‌சி‌றிது ஏல‌க்காயை சே‌ர்‌த்து‌க் கொ‌ள்வது ந‌ல்லது. அ‌திகமாக சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள‌க் கூடாது.
இதில் உள்ள வாலட்டைல் என்ற எண்ணெய்தான் நறுமணத்தையும் தந்து நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றலையும் தனக்குள் கொண்டுள்ளது. இதில் உள்ள காரக்குணம் வயிற்றுப் பொருமலைக் குணமாக்கி எளிதில் செரிமானம் ஆகும்படி தூண்டுகிறது.

4.ஏலக்காயை தேநீர் பாயசம் முதலியவற்றில் சேர்த்துப் பருகினால் இதில் உள்ள மனம் கவரும் நுண்ணிய பண்பு மன இறுக்கம் படபடப்பு முதலியவற்றை அகற்றி உடனடியாகப் புத்துணர்ச்சி அளிக்கிறது.எனவே காலையில் தேநீர் அல்லது காபியில் ஏலக்காய் சேர்த்து அருந்துவது நல்லது.
ஈரப்பதம் புரதம் மாவுப்பொருள் நார்ச்சத்து மற்றும் கால்சியம் பாஸ்பரஸ் இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.

5.இரவு ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி தொண்டைக்கட்டு உள்நாக்கில் வலி குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

6.பாலில் சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து இருபாலரும் தினமும் அருந்தி வந்தால் இருபாலருக்கும் குறைபாடுகள் குணமாகும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளையே பயன்படுத்தினால் போதும்.

7.ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.சில சமயம் வெங்காயம் வெள்ளைப்பூண்டு சேர்த்துக் கொள்பவர்களுக்கு நெஞ்செரிச்சலும் வாய்வுத் தொந்தரவும் இருக்கும். இவர்கள் சாப்பாட்டிற்குப் பிறகு ஏலக்காய் மெல்லுவது நல்லது. இரண்டு ஏலக்காயில் உள்ள விதைகளை இடித்து கிராம்புகள் மல்லித்தூள் சேர்த்து தண்ணீர் கலந்து விழுங்கினாலும் உடல் ஜீரணமாகும்.

8.இதே போல ஏலக்காயை ‘சூயிங்கம்’மிற்கு பதிலாக மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும்.சிலர் வாயிலிருந்து முடை நாற்றம் வீசும். அருகில் இருந்து பேசமுடியாத படி வாய் நாற்றம் தூக்கி அடிக்கும். இவர்களும் ஏலக்காய் மெல்லலாம்.

9.நெல்லிக்காய்ச் சாறில் ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூளைச் சேர்த்துத் தினம் மூன்று வேளை அருந்தி வந்தால் மேகவெட்டை நோய்க்கு இது அருமருந்தாகும். இத்துடன் சிறுநீர்ப்பை சுழற்சியும் சிறுநீர்க் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலும் குணமாகும்.

10.அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5, 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.

Collected by

Ezhilarasan Venkatachalam
Salem, South India.

Comments

Popular posts from this blog

THEN WE IMPORTED VACCINES - NOW WE EXPORT

  " Then we imported, now we were exporting". அப்போது வாங்கினோம் இப்போது கொடுக்கிறோம் DELHI. In the year 1947 when India got independence, lakhs of people were affected by Malaria. / புதுடெல்லி. கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்றபோது லட்சக்கணக்கானோர் மலேரி யாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். Then the Red Cross of Canada sent the medicine Pencillin in 93 boxes to India./   அப்போது கனடாவைச் சேர்ந்த  செஞ்சிலுவை சங்கம் சார்பில் இந்தியாவுக்கு 93 பெட்டிகளில் பென்சிலின் மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. It reached Delhi on October 17,1947 in an aeroplane.  கனடாவில் இருந்து விமானத்தில் அனுப்பப்பட்ட பென்சிலின் மருந்துகள்  கடந்த 1947-ம் ஆண்டு அக்டோபர் 17-ம்தேதி டெல்லி வந்தடைந்தன.  Ms. Rajkumari Amirth Guar, the then Health Minister received it.  அந்த மருந்துகளை அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் பெற்றுக் கொண்டார். Due to corona pandemic, the European medicine manufacturing factories are struggling to produce enough corona vaccin...

Translation - Just Smiling In the Mirror daily in good - Venkatachalam Salem

Daily even smiling at ourself is good. தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நல்லதாம்.  We often think of a smile as a natural response to feel good emotions. /  நல்ல உணர்ச்சிகளை வெளிக்காட்ட அல்லது உணர  புன்னகையை இயற்கையான பதிலாக நாம்  நினைக்கின்றோம். But did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? /  ஆனால் புன்னகை -- அந்த புன்னகை போலியானதாக இருந்தாலும் -- உங்கள் மனநிலையை அதிகரிக்கவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? Just Smile In the Mirror daily. /  தினமும் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்து சிரிக்கவும். Research found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. /  கண்களைச் சுற்றியுள்ள முகத் தசைச் செயல்பாட்டை உள்ளடக்கிய ஒரு பெரிய புன்னகை, நம் மூளை செயல்பாட்டில் மற்றும் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சிகள் கூறுகிறது. All this research points to one...

Just Smile In the Mirror daily Venkatachalam salem health tips

Daily Afternoon Ritual: Smile In the Mirror சுறுக்கமாக : தினமும் நம் முகத்தை பார்த்து, நமக்கு நாமே சிரித்துக் கொண்டால் கூட நமக்கு நல்லதாம் Theresa Cheung, author of "21 Rituals to Change Your Life," invites you to try a simple ritual for 21 days and find out how small actions can change your life. You are never fully dressed without a smile is how the saying goes and morning ritual number five completely agrees. We often think of a smile as a natural response to feel good emotions but did you know that smiling – even if that smile is fake – can boost your mood and reduce stress? Research done by psychology and facial coding expert Paul Ekman and backed up by recent research* published in Psychological Science found that a big smile that involves facial muscle activity around the eyes can produce a change in brain activity and mood. All this research points to one simple but wonderful conclusion: smiling will make you feel better. (Frowns actually have the op...