Skip to main content

Posts

Grateful Brain ALEX KORB Venkatachalam salem health TIPS library

  Gratitude, particularly if practiced regularly, can keep you healthier and happier. (Abridged version). Written by Alex Korb Ph.D. =॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥=॥= சுறுக்கமாக தமிழில் சில பகுதிகள் மட்டும் (*) அடிக்கடி நன்றி உணர்வு உங்களுக்கு ஏற்பட்டால், நீங்கள் கூடுதல் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்களாம்.    (*) தினமும் 15 நிமிடம் படுக்க செல்லும் முன்பு, யாரையாவது அல்லது எந்த சம்பவத்தை யாவது நன்றி உணர்வுடன் சில வரிகள் எழுதியவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக ஓர் அளவு மாறி உள்ளதாம். (*) நன்றி உணர்வு மனப்பான்மை மூளையில் உள்ள ஹைப்போ தாளமஸ் (hypothalamus) என்ற பகுதியில் நிறைய செயல்பாடுகளை செய்ய துண்டுகிறதாம். இந்த பகுதி தான் நாம் சாப்பிட, தூங்க, மது குடிக்க போன்ற பல செயல்களை நாம் செய்ய அடிப்படை கட்டளைகளை இடுகிறதாம்.  **  தமிழில் இணையான கட்டுரையை படிக்க .. இதை அழுத்தவும் CLICK HERE FOR .. Equivalent Tamil article **CAUTION : This is a very short version chunked by me with great efforts from the original article titled "The Grateful Br...

Dangers in mobile usage Dr Salini Tamil Venkatachalam health TIPS LIBRARY

Dangers in mobile phone usage ஆண்களுக்குப் பொறுப்புணர்வு, பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை! - உளநல நிபுணர் ஷாலினி பேட்டி போதை வசப்படும் பொருட்களில் முதன்மையான இடத்தைப் பிடித்திருக்கிறது செல்போன். குழந்தைகளும் இளைஞர்களும் கவனத்தைச் சிதறவிடுகிறார்கள். பெண்களுக்குப் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும் விஷயமாக செல்போன் மாறியிருக்கிறது. செல்போனைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் உளநல நிபுணர் ஷாலினி. செல்போனுக்கு ஒருவர் அடிமையாகிவிட்டார் என்பதை எப்படி  அறிந்துகொள்வது? தனிமையில் இருப்பவர்களுக்கும் அதிருப்தியான உறவுநிலையில் இருப்பவர்களுக்கும் கையில் செல்போன் இருக்கும்போது, அது ஒரு அடிமைப்படுத்தக்கூடிய வஸ்துவாக மாறிவிடுகிறது. ஒரு பொருளைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தும்போது அந்தப் பயன்பாட்டின் அளவு அதிகரிப்பதைத்தான் அடிமைப்படுத்தும் நிலை என்கிறோம். காலையில் எழுந்தவுடனே போனைக் கையில் எடுப்பது, இந்தப் பழக்கத்தைப் பற்றி யாராவது பேசினால் கோபம் வருவது போன்றவை ஒருவர் செல்போனை எந்த அளவுக்குச் சார்ந்திருக்கிறார் என்பதைக் காட்டும். இத்தனைக்குப் பிறகும்...

Easy ways to FIGHT DEPRESSION? Tamil Venkatachalam health TIPS library

எதையும் ‘மூடு’ பார்த்துத்தான் சொல்ல வேண்டியிருக்கிறது, யாரிடமும். சரி, இந்த ‘மூடு’ பற்றி என்றைக்காவது யோசித்திருக் கிறீர்களா?  ‘மூடு’ என்பதை மனநிலை என்று மொழிபெயர்க்கலாம். நல்ல மனநிலையைப் பற்றி யாரும் கவலைப்படப்போவதில்லை. சில சமயங்களில் கவலை, கோபம், வருத்தம், சோம்பல் போன்ற தீய மனநிலைகள், நாள் கணக்கில் நீடிப்பது உண்டு. அதை எப்படி நீடிக்கவிடாமல் செய்வது? எளியவழிகள் 1.   தீய மன நிலையை நல்லதாக மாற்ற மூச்சுவாங்கவைக்கிற உடற்பயிற்சிகள் உகந்தவை.  அப்போது அதிக அளவில் ஆக்சிஜன் உடலுக்குள் பாயும். இதயம் படபடவென்று அடித்துக்கொண்டு உடல் முழுவதும் ரத்தம் வேகமாகப் பரவும். இருபது நிமிடங்களாவது வேகநடை, நீச்சல், சைக்கிள் ஓட்டுதல்,மெல்ல ஓடுதல், கயிறு தாண்டுதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். 2.   உடலுக்கு வைட்டமின்கள் வலுவூட்டுவதைப் போல வண்ணங்கள் மனதுக்கு வலுவூட்டும். மனதில் கோபமும் எரிச்சலும் உள்ளபோது, சிவப்பு நிறப் பொருட்களைப் பார்க்காமல் தவிர்க்கலாம்.  மனச்சோர்வின்போது கருப்பு, கரு நீலம் ஆகிய நிறங்கள் அதை அதிகமாக்கும் . பிரகாசமும் விறுவிறுப்பும் கொண்ட நிறங்கள் மனத...

Whatsapp excess usage danger Tamil Venkatachalam Salem health tips LIBRARY

மாணவர்கள், இளைஞர்களை அடிமைகளாக்கும் 'வாட்ஸ்அப்': மனநல பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர் எச்சரிக்கை சமூக வலைதளங்களை உபயோகிப்பது தற்போது மாணவர்கள், இளைஞர்களை மிகவும் ஈர்க்கும் விஷயமாக மாறிவிட்டது. இதில் செல்போனில் ‘வாட்ஸ்அப்’ பயன் படுத்துவது உச்ச கட்டமாகி விட்டது. தொழில் ரீதியாகவும், பொழுது போக்காகவும் ஆரம்பித்த இந்த ‘வாட்ஸ்அப்’ பயன்பாடு, தற்போது ஒரு போதைப்பொருளாகவே மாறிவருகிறது. இளைஞர்கள் இன்று வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாள் முழுவதும் மூளையை கசக்கி ‘வாட்ஸ்அப்’பில் குறுஞ்செய்தி, வீடியோ, புகைப்படம் அனுப்புவதில் அதீத நாட்டம் கொள்கின்றனர். வாட்ஸ்அப்பில், ஒவ்வொருவரும் ஒரு குழுவைத் தொடங்கி, ஆரம்பத்தில் அன்றாட முக்கிய நிகழ்வுகள், நகைச்சுவை செய்திகள் அனுப்பத் தொடங்கிய அவர்கள், தற்போது உச்சமாக ஆபாச வீடியோ, புகைப்படங்களை அனுப்பி அதற்கு நாள் முழுவதும் அடிமையாகி விட்டனர். அதனால் இளைஞர்கள், மாணவர்களால் இன்றைய அவசர வாழ்க்கையிலும், ஒருநாள்கூட செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ‘வாட்ஸ்அப்’ உபயோகிக்க இயலாத நேரங்களில் எரிச்சல், பதற்றம், எதையோ இழந்த உணர்வு...

Depression arresting people Tamil Dr GANESAN g Venkatachalam Salem health tips library

மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம் -கு.கணேசன் (June 2017) உலகிலேயே மன அழுத்தம் உள்ளவர்கள் அதிகமாக வாழும் நாடு எது தெரியுமா?  இந்தியாதான்.  2011-ல் எடுத்த புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேரிடம் காணப்பட்ட மன அழுத்தம் 2015-ல் 100-க்கு 20 பேரிடம் காணப்படுவதாகவும், இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 50-%க்கும் அதிகமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.   தமிழ்நாட்டின் நிலைமை 10%. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால், மன அழுத்தம் ஒரு தேசியப் பிரச்சினை ஆகிவருகிறது என்றும் அது எச்சரித்துள்ளது. மன அழுத்தமானது தனிப்பட்ட ஒரு மனிதரின் மன நலப் பிரச்சினை என்று கடந்து செல்ல முடியாது. இந்தப் பாதிப்பின் ஆரம்பகட்டத்தில் குடும்ப வேலை, அலுவலக வேலை போன்ற சாதாரண வாழ்வியல் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் திணறுவார்கள். ஆனால், காலப்போக்கில் உடல் நலம் குறைவதும், உறவுகள் சிதைவதும், ஒட்டு மொத்த சமூகமே எதிரியாவதும் தவிர்க்க முடியாத தாகிவிடும்.  நாள்பட்ட மன அழுத்தம் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையே சீர்குலைத்து விடுகிற ஆபத்து நிற...

Depression crippling disease Tamil Dr godson Venkatachalam Salem health tips library

Depression crippling disease Tamil Dr Godson Venkatachalam salem health tips வாழ்க்கையை முடக்கும் நோய்களில் ‘மன அழுத்தம்’ முதலிடம் பிடிக்கும்: உலக சுகாதார தினத்தில் அதிர்ச்சி தகவல் ஒய்.ஆண்டனி செல்வராஜ் . . வரும் 2020-ம் ஆண்டில் மனித வாழ்க்கையை முடக்கும் நோய்களில் மன அழுத்தம் முதலிடம் பிடிக்கும் என்று சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. அரிதான நோய்களைக்கூட எளிதில் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் அளவு மருத்துவத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால், நூற்றுக்கு பதினைந்து பேரை பாதிக்கும் மன அழுத்த நோயானது இன்னும் விழிப்புணர்வு குறைந்த, சிகிச்சை எடுக்காமல் அலட்சியப்படுத்தும் நோயாக இருக்கிறது. இந்த ஆண்டு ‘மன அழுத்த நோயைப் பற்றி பேசுவோம்’என்பதே நாளை (ஏப்.7) உலக சுகாதார தினத்தின் மையக் கருப்பொருளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, தற்போது மக்களின் வாழ்க்கையை முடக்கும் நோய்களில் இதய நோய்கள் முதலிடம் வகிக்கின்றன. ஆனால் 2020-க்கு பிறகு மன அழுத்த நோய் அந்த இடத்தைப் பிடித்து பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் ஒன்றாக மாறி வருகிறது...

Depression prevention Tamil prof venkatapathi Venkatachalam Salem health tips sandwich

வணிக நூலகம்:  உணர்வுகள் மேம்பட வேண்டும் பேராசிரியர் ஆர். வேங்கடபதி ஃப்ரிடு (FREUD) என்ற உளவிய ளாலார் தவறுகளை ஏற்றுக் கொண்டவர்களை சரி என்றும், மறுத்தவர்களை தவறு என்றும் சுட்டிக்காட்டினார். ஆனால், டேவிட் பர்ன்ஸ் (DAVID BURNS) என்ற இந்த நூலாசிரியர் தவறுகளை ஏற்றுக் கொண்டவர்களை மறுத்தும், சரி என்று ஒப்புக் கொண்டவர்களை உணர்வுகள் மேம்படும் வகையில் உருவாவார்கள் என்றும் வகைப்படுத்தினார். மன அழுத்தம் என்பது அறிந்தும் அறியாதது, தெரிந்தும் தெரியாதது. நல்ல உணர்வு களைக் கொண்டிருப்பதைப் போன்ற மோசமான எழுச்சி நிலையாகும். . . மன அழுத்தத்தில் இருப்பவர்கள் தங்களை பற்றிய எண்ணங்களையும், அவர்களுடைய உண்மையான வெற்றி களையும் மாறுபாடான கோணத்தில் அணுகுவார்கள். மன அழுத்தம் என்பது எதிர்மறையான சரியில்லாத எண்ணங்களின் சுழற்சியாகும். அது போன்ற சுழற்சிகள் மனச்சோர்வுகளை அதிகரிக்கும். மனச்சோர்வு என்ற வட்டத்திற்குள் சென்றவர்கள் மன அழுத்தம் என்ற சுழற்சியில் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டிது தான். இந்த உள்ளுணர்வுகள் எண்ணங் களின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்து வதற்கு தேவையானதாக அமையும். எண்ணங்கள் மூலம் மாற்றங்கள்...