அமர்ந்தே வேலை செய்வது ஆபத்தா? .. Duplicate என் பணி நிமித்தம் தொடர்ந்து பல மணி நேரத்துக்கு அமர்ந்தே வேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். இதனால் ஆரோக்கியம் கெடும், பல நோய்கள் வரும் என்று பயமுறுத்துகிறார், என் நண்பர். அவர் சொல்வது சரியா? உங்கள் நண்பர் கூறுவது மிகவும் சரி. நம் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வாழ்க்கைமுறை மாற்றங்களில், அமர்ந்தே வேலை செய்வது என்பது தற்போது கவனிக்கப்பட வேண்டிய பட்டியலில் சேர்ந்துவிட்டது. கைபேசி, தொலைக்காட்சிப் பெட்டியை இயக்கும் ரிமோட், மடிக்கணினி போன்ற புதிய தொழில்நுட்ப வசதிகளால், அமர்ந்த இடத்திலிருந்தே அனைத்து வேலைகளையும் செய்ய முடிவதாலும், தங்களுக்கு வழங்கப்பட்ட அலுவலகப் பணியைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடித்துக் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தாலும், தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்வது அவசியமாகிவிட்டது. இவர்கள் இடையிடையே எழுந்திருப்பதும், நடப்பதும் குறைந்துவிட்டது. அரை நூற்றாண்டுக்கு முன்புவரை இம்மாதிரியான பணியில் ஈடுபட்டவர்களுக்குக் கிடைத்த உடல் அசைவுகள் இப்போது இவர்களுக்குக் கிடைப்பதில்லை. இவ்வாறு பல மணி நேரத்துக்குத் தொடர்ந்து அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு...
HEALTH TIPS articles in English and Tamil. // உடல் மற்றும் மன ஆரோக்கியம் சம்பந்தமான கட்டுரைகளின் திரட்டு.